Home One Line P1 நான்காம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மாமன்னர் ஆதரவு!

நான்காம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மாமன்னர் ஆதரவு!

422
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நான்காவது கட்டமாக மே 12 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டை விதித்திருப்பதற்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி கொவிட்-19 நோயாளிகளின் மீட்பு விழுக்காடு அதிகரித்து வருவது, மலேசியா உலகின் மிகச் சிறந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செய்து வருவதற்கு ஒப்பாகும் என்று மாமன்னர் குறிப்பிட்டதாக அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாசில் ஷாம்சுடின் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் மஸ்ஜிட் இந்தியாவில் வெளிநாட்டவர்களிடையே நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் போன்றவற்றை அரசு விரைந்து கவனித்தை அவர் பாராட்டியதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“கொவிட்-19- இன் இறக்குமதி சம்பவங்களைத் தடுக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுழைவதைத் தடை செய்வதில் அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது” என்று அவர் கூறினார்.

வளர்ந்த நாடுகள் உட்பட பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவில் கொவிட்-19 சம்பவங்களில் மிகக் குறைந்த விழுக்காட்டை பதிவு செய்ய உதவியதற்காகவும், விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும்  சுல்தான் அப்துல்லா அரசாங்கத்தையும் தொடர்புடைய அதிகாரிகளையும்  பாராட்டியுள்ளார்.