Home One Line P2 தமிழ்நாடு : 5 நகர்களில் முழு ஊரடங்கு அமுலாக்கம்

தமிழ்நாடு : 5 நகர்களில் முழு ஊரடங்கு அமுலாக்கம்

565
0
SHARE
Ad
சென்னை – கொவிட்-19 எதிரான போராட்டத்தில் தனது அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையாக தமிழக அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை 5 நகர்களில் முழுமையான ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 நகர்களே முழுமையான ஊரடங்குக்கு உள்ளாகியுள்ள 5 நகர்களாகும்.
எதிர்வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி காலை 6.00 மணி தொடங்கி ஏப்ரல் 29 இரவு 9.00 மணி இந்த முழு ஊடரங்கு கட்டுப்பாடுகள் அமுலாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
முந்தைய ஊரடங்கு அறிவிப்புகளைப் போல் அல்லாமல் முன்கூட்டியே அவகாசம் கொடுத்து இந்த அமுலாக்கம் நடைமுறைக்கு வருகிறது.
கொவிட் -19 அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாக இந்த நகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.
இதற்கிடையில் இந்தியா முழுவதிலும் இன்று வெள்ளிக்கிழமை வரையில் 23,452 பேர்களுக்கு கொவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 723 ஆக உயர்ந்திருக்கிறது.