Home One Line P1 கொவிட்-19: நாட்டில் ஒரு மில்லியன் சுற்றுலாத் துறை தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்!

கொவிட்-19: நாட்டில் ஒரு மில்லியன் சுற்றுலாத் துறை தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்!

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் சுற்றுலாத் துறையில் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறுகையில், இந்த துறையின் முதல் நான்கு மாதங்களில் சுமார் 20 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சி குறித்து அவர் கவலை தெரிவித்த நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் பயமுறுத்துவதாக அவர் விவரித்தார்.

#TamilSchoolmychoice

“அமைச்சின் தரவுகளிலிருந்து, சுமார் 17,000 சுற்றுலா வழிகாட்டிகள் இந்த வகைக்குள் வரக்கூடும்.”

“அவர்களின் குடும்பங்களையும், குழந்தைகளையும் இன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

சுற்றுலா மீட்பு நடவடிக்கைக் குழு மூலம் சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சகம் இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, நடவடிக்கைகள் மற்றும் உத்திகள் குறித்து விவாதிக்க பல அரசு நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

மீட்புத் திட்டங்களில், இணையப் பயண பயிற்சி திட்டங்கள், இசை வகுப்புகள், இணைய நடனம், இணைய கண்காட்சிகள், மின்-சந்தைப்படுத்தல் திட்டங்களை வழங்குதல் போன்ற தகவல்தொடர்பு அடிப்படையிலான முன்முயற்சிகளை அறிமுகப்படுத்துவதாக அவர் கூறினார்.

இவற்றுடன், சுற்றுலா ஓட்டுநர்களுக்கு வரிவிலக்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளையும் தனது அமைச்சகம் விவாதித்து வருவதாக அவர் கூறினார்.