Home One Line P1 கொவிட்-19: மலேசியாவில் பாதிப்புச் சம்பவங்களை சமன் செய்துள்ளோம்! – நூர் ஹிஷாம்

கொவிட்-19: மலேசியாவில் பாதிப்புச் சம்பவங்களை சமன் செய்துள்ளோம்! – நூர் ஹிஷாம்

415
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியா இப்போது கொவிட் -19 பாதிப்பின் மீட்பு கட்டத்தில் நுழைந்துள்ளதாக சுகாதார அமைச்சு இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கட்டம் ஒன்று மற்றும் இரண்டில் நாட்டில் கொவிட்-19 வளைவுகளை சமன் செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது என்று அவர் கூறினார்.

“ஏப்ரல் 3-ஆம் தேதி தரவைப் பார்க்கபோனால், அங்கு கொவிட்-19 நோய்த்தொற்றின் 217 நேர்மறை சம்பவங்கள் இருந்தன. அதுதான் உயர்ந்தது. ”

#TamilSchoolmychoice

“ஏப்ரல் 14-ஆம் தேதி ஒட்டுமொத்தமாக 6,300 சம்பவங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.”

“இருப்பினும், அது அப்படி இல்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கட்டம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை கட்டுப்பாட்டை சமன் செய்துள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று நேற்று வெள்ளிக்கிழமை கூறினார்.

கொவிட்-19- இன் நேர்மறையான நிகழ்வுகளை காலப்போக்கில் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்த தேவையான வேகத்தை பராமரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“நடமாட்டக் காலக்கட்டத்தில் செயல்படுத்தப்பட்டதை நாம் பின்பற்றுவது முக்கியம்.”

“நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தின் மூன்று கட்டங்களிலும் நாம் வெற்றியைக் காண்கிறோம்.”

“வளைவுகளைக் கட்டுப்படுத்தவும் சமன் செய்யவும் மற்றும் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் முடிந்தது” என்று அவர் கூறினார்.