புத்ரா ஜெயா – மலேசியாவில் கொவிட்-19 மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டம் கட்டமாக மேம்பட்டு வரும் நிலையில் தற்போதைக்கு 5 வட்டாரங்கள் மட்டுமே சிவப்பு நிறம் கொண்டவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சு 1200-க்கும் மேற்பட்ட உள்ளூர் வட்டாரங்களைக் கண்காணித்ததில் பல இடங்கள் பச்சை நிற வட்டாரங்களாக உருமாறி வருகின்றன. 5 வட்டாரங்கள் மட்டுமே 40-க்கும் மேற்பட்ட தீவிர கொவிட்-19 பாதிப்புகளைக் கொண்ட வட்டாரங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
75 விழுக்காடு வட்டாரங்களில் எந்தவிதத் தொற்றும் இல்லை என்பதால் அவை பச்சை நிற வட்டாரங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சரவாக்கில் கூச்சிங், கோத்தா சமாரஹான் ஆகிய இரண்டு வட்டாரங்கள், ஜோகூரில் உலு பெனுட், சிலாங்கூரில் உலு லங்காட், நெகிரி செம்பிலானின் லாபு ஆகிய ஐந்து வட்டாரங்கள் மட்டுமே தற்போது சிவப்பு நிற வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
40-க்கும் மேற்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் கொண்ட வட்டாரங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 20-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் கொண்டவை ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், ஒன்று முதல் 20 வரையிலான பாதிப்புகள் கொண்ட வட்டாரங்கள் மஞ்சள் நிற மண்டலங்களாகவும், அறவே பாதிப்புகள் இல்லாத பகுதிகள் பச்சை நிற மண்டலங்களாவும் வகைப்படுத்தப்படுகின்றன.