Home One Line P2 கொவிட்-19: ஆசியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது!

கொவிட்-19: ஆசியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது!

553
0
SHARE
Ad

சிங்கப்பூர்: ஆசியாவின் மிகச்சிறிய மக்கள்தொகையில் ஒன்றான சிங்கப்பூர், தென் கிழக்காசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரொனாவைரஸ் தொற்றுகளைக் கொண்ட நாடாக உருமாறி உள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 931 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 13,000- க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகி, ஜப்பானை விஞ்சிவிட்டது.

சீனா மற்றும் இந்தியா மட்டுமே ஆசியாவில் அதிக சம்பவங்களைக் கொண்டுள்ளன.

#TamilSchoolmychoice

வெளிநாட்டுப் பணியாளர்களின் தங்குமிடங்களில் உள்ள பணியாளர்களிடையே பெரும்பாலான நோய்த்தொற்றுகள் இன்னும் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த வாரம், சுமார் 5.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர் கொவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த ஜூன் 1 வரை மேலும் நான்கு வாரங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை நீட்டித்தது.