Home One Line P1 முன்னாள் துணை அமைச்சர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்!

முன்னாள் துணை அமைச்சர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்!

441
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் புசியா சல்லே, தவறான செய்திகளை பரப்பியதற்காக நாளை புதன்கிழமை ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

இன்று புக்கிட் அமான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தனது முகநூல் கணக்கு மூலம் வெளியிட்ட பதிவுகள் காரணமாக அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து மலேசியர்கள் திரும்பியதைத் தொடர்ந்து குடிநுழைவுத் துறை கட்டிட வளாகத்தில் கலவரம் ஏற்பட்டது என்று கூறி ஒரு காணொளியை அவர் வெளியிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் அது பழைய காணொளி என்று குறிப்பிடப்பட்டதும் , அது அகற்றப்பட்டு, மன்னிப்புக் கோரப்பட்டது.

முன்னதாக, புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500 மற்றும் பிரிவு 505 (பி) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது அவதூறு மற்றும் பொது அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு என்றும் கூறினார்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233-இன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.