Home One Line P1 கொவிட்-19: குறைந்த சம்பவங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன!

கொவிட்-19: குறைந்த சம்பவங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன!

370
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த மார்ச் 18-ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான கொவிட்-19 நேர்மறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இதுவரையிலும், தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும் என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு முன்னும் பின்னும் கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதில் அரசாங்கத்தின் தீவிர ன நடவடிக்கைகளின் விளைவாக இந்த முடிவு பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“மக்களிடையேயான தொடர்புகளை குறைக்கவும், கொவிட்-19- இன் தொற்றுநோயைக் குறைக்கவும் சுகாதார அமைச்சுஉதவுகிறது,” என்று அவர் இன்று இங்கு தினசரி கொவிட்-19 ஊடக சந்திப்பில் கூறினார்.