Home One Line P1 குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் முகநூல் பதிவு குறித்த குற்றத்தை மறுத்துள்ளார்!

குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் முகநூல் பதிவு குறித்த குற்றத்தை மறுத்துள்ளார்!

483
0
SHARE
Ad

குவாந்தான்: குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் புசியா சாலே பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் அளவில் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அவர் மீதான குற்றம் வாசிக்கப்பட்டதை அடுத்து, தாம் அவ்வாறான பதிவை வெளியிட்டதில் குற்றமில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் புசியா சாலே, தவறான செய்திகளை பரப்பியதற்காக ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரிலிருந்து மலேசியர்கள் திரும்பியதைத் தொடர்ந்து குடிநுழைவுத் துறை கட்டிட வளாகத்தில் கலவரம் ஏற்பட்டது என்று கூறி ஒரு காணொளியை அவர் வெளியிட்டிருந்தார்.

பின்னர் அது பழைய காணொளி என்று குறிப்பிடப்பட்டதும் , அது அகற்றப்பட்டு, மன்னிப்புக் கோரப்பட்டது.