Home 13வது பொதுத் தேர்தல் குவாந்தான் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் புசியா சாலே – அன்வார் அறிவிப்பு

குவாந்தான் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் புசியா சாலே – அன்வார் அறிவிப்பு

695
0
SHARE
Ad

Fuziah-Salleh-Sliderகுவாந்தான், மார்ச் 30 – எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் குவாந்தான் நாடாளுமன்றத்திற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக கட்சியின் உதவித் தலைவர் புசியா சாலே (படம்) நிறுத்தப்படுவார் என்றும், அவர் தனது தொகுதியை மீண்டும் தற்காத்துக் கொள்ள இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், இன்று கம்போங் சுங்கையில் நடந்த கூட்டமொன்றில், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த 2008ல் நடந்த தேர்தலில் புசியா, தேசிய முன்னணி  வேட்பாளர் டத்தோ பூ ஆ கியோவை 1826 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். புசியா 18,398 வாக்குகள் பெற்றவேளையில், பூ 16,572 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் இந்த குவாந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 53,702 பேர் ஆவர்.

#TamilSchoolmychoice

அதில் 62 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 34 விழுக்காடு சீன மற்றும் 4 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் அடங்கியுள்ளனர்.

-பெர்னாமா