Home One Line P2 கொவிட்-19: அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் மேல் சம்பவங்கள் பதிவு!

கொவிட்-19: அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் மேல் சம்பவங்கள் பதிவு!

452
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு பாதிப்பானவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் மேல் எட்டியுள்ளது. உலகிலேயே அதிகமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி, அமெரிக்காவில் கொவிட்-19 காரணமாக 57,000 வரை இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மாநிலங்களில், நியூயார்க் இந்த தொற்றுநோயால் கிட்டத்தட்ட 300,000 சம்பவங்களை பதிவு செய்துள்ளது. மேலும், 22,000 பேர் இதில் இறந்துள்ளனர். அதைத் தொடர்ந்து நியூ ஜெர்சியும் அதிகமான சம்பவ எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

ஒரு சில பகுதிகளில் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்த போதிலும், ஆளுநர்கள் மாநிலத்தின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை குறைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜார்ஜியா, டென்னசி மற்றும் டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் நிலையில், அங்கு பொருளாதாரத் தடைகளை குறைக்க அம்மாநிலங்கள் கட்டுப்பாட்டை தளர்த்துள்ளன.