Home One Line P1 திடீர் மரணங்களைச் சந்திப்போருக்கு எதிராக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறதா?

திடீர் மரணங்களைச் சந்திப்போருக்கு எதிராக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறதா?

392
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திடீர் மரணங்களை சந்திப்பவர்களுக்கு எதிராக மருத்துவமனைகள் கொவிட்-19 பரிசோதனையை நடத்துவதாக மலேசியா இன்சைட் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையின்படி, நோயாளிக்கு கொவிட் -19 நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், உடலை நிர்வகிக்கும் ஊழியர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாக்க வேண்டும் என்பதாலும் இது நடத்தப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

கொவிட் -19 பரிசோதனை முதன்மையாக சந்தேகத்திற்கிடமான மரண வழக்குகள் தொடர்பாக நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்ததாக அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“ஆம், மிகவும் சந்தேகத்திற்கிடமான வழக்குகளுக்கு,” என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மரணத்திற்கான பிரேத பரிசோதனையின் போது மருத்துவமனைகள் கொவிட்-19 பரிசோதனை செய்வதாக மற்றொரு வட்டாரம் தெரிவித்ததாக அது கூறியது.

ஏப்ரல் 6-ஆம் தேதி, சபாவில் காயா தீவில் ஓர் ஆடவரின் சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டது. கொவிட் -19 க்கு அவர் நேர்மறையானவர் என்று மருத்துவமனை பின்னர் கண்டறிந்தது.