Home One Line P1 பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்வு!

பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்வு!

386
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னதாக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட கோத்தா பாரு மற்றும் பேராக் ஹிளிர் உள்ளிட்ட பகுதிகள் தற்போது எந்தவொரு கொவிட்-19 சம்பவங்களும் இல்லாத நிலையில் பச்சை மண்டலமாக பட்டியல் இடப்பட்டுள்ளன.

நாட்டில் மொத்தமாக 85 மாவட்டங்கள் இதுவரையிலும் பச்சை மண்டலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிவப்பு மண்டலம் 40- க்கும் மேற்பட்ட நேர்மறையான சம்பவங்களைக் கொண்ட பகுதி. கிளந்தான் கோத்தா பாருவில் 90 சம்பவங்களும், பேராக்கில் 65 சம்பவங்களும் பதிவாகி இருந்தன.

#TamilSchoolmychoice

இருப்பினும், சுகாதார அமைச்சின் இன்றைய விளக்கப்படத்தில் இவ்விரு மாவட்டங்களிலும் சம்பவங்கள் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

சிவப்பு மண்டப்பகுதிகள் 12-ஆக பதிவாகி உள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 100 இறப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், 5,851 கொவிட் -19 நேர்மறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 4,032 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 1,719 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.