Home One Line P1 கொடுங்கோன்மைக்கு ஆளான ரோஹிங்கியாக்களை வெறுக்க வேண்டாம் – மகாதீர்

கொடுங்கோன்மைக்கு ஆளான ரோஹிங்கியாக்களை வெறுக்க வேண்டாம் – மகாதீர்

751
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொடுங்கோன்மைக்கு ஆளான ரோஹிங்கியாக்களை நாம் வெறுக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

ரோஹிங்கியா மக்கள் மீது முதலில் அனுதாபப்பட்ட மலாய்க்காரர்கள், இப்போது அவர்களை வெறுக்கிறார்கள் என்பது தாம் அறிந்திருப்பதாகவும், முன்பு அவர்கள் மீது மிகுந்த அக்கறைக் கொண்டதும் அவர்களே என்று குறிப்பிட்டார்.

“ஆனால், இப்போது அவர்களின் எண்ணிக்கை உயர்ந்தும், மலாய்க்காரர்கள் குறித்து வெறுப்பு கருத்துகள் வெளியிட்டதும், அனுதாபம் மறைந்துவிட்டது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மியான்மரின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க இஸ்லாமிய நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் செயல்பட வேண்டும் என்று டாக்டர் மகாதீர் தனது வலைப்பதிவில் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

“மியான்மர் மற்றும் (மியான்மர் மாநில ஆலோசகர்) ஆங் சான் சூகி அவர்களின் கொடுங்கோன்மைக்கு நாங்கள் விமர்சித்திருக்க வேண்டும், அவர்களுடன் வணிகத் தடையை செய்திருக்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.