Home One Line P2 சீனாவைத் தவிர்த்து அனைத்து ஈஸ்பிரிட் ஆடை விற்பனை மையங்களும் மூடப்படுகிறது!

சீனாவைத் தவிர்த்து அனைத்து ஈஸ்பிரிட் ஆடை விற்பனை மையங்களும் மூடப்படுகிறது!

595
0
SHARE
Ad

ஹாங்காங்: ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், ஆடை அலங்ககார விற்பனை மையம், ஈஸ்பிரிட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம், ஜூன் மாத இறுதிக்குள் சீனாவிற்கு வெளியே உள்ள அனைத்து கடைகளையும் மூட உள்ளது.

இப்பகுதிகளில் விற்பனையின் சரிவு மற்றும் கொவிட் -19 பாதிப்பு காரணமாக அந்நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக தைவானின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஹாங்காங் மற்றும் மக்காவ் உள்ளிட்ட இடங்களில் ஜூன் மாத இறுதிக்குள் சீனாவைத் தவிர்த்து ஆசியாவில் உள்ள அனைத்து 56 சில்லறை கடைகளையும் மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஈஸ்பிரிட்டின் தைவான் கிளை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

#TamilSchoolmychoice

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஈஸ்பிரிட் தைவானில் 26 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈஸ்பிரிட் கூறினார்.

“கொரொனா தொற்று எங்கள் வணிகத்தில் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் இது ஈஸ்பிரிட்டுக்கு சரியான படியாகும்” என்று ஈஸ்பிரிட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டர்ஸ் கிறிஸ்டியன்சன் தனது இணையதளத்தில் ஏப்ரல் 27 தேதியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.