Home அரசியல் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை; பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்பேன் – சொய் லெக் அறிவிப்பு

பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை; பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்பேன் – சொய் லெக் அறிவிப்பு

615
0
SHARE
Ad

Chua Soi Lekகோலாலம்பூர், ஏப்ரல் 11 – புதிய வேட்பாளர்களுக்கு வழி விடும் நோக்கத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்று ம.சீ.ச கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து சுவா கூறுகையில், “எனது இந்த முடிவால், கட்சியில் உள்ள இளம் தலைமுறையினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும். அதோடு ம.சீ.ச சார்பாக நாடு முழுவதும் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ந்து என்னால் கலந்து கொள்ள முடியும்.

ம.சீ.ச வில் நிறைய இளம் தலைவர்கள் உருவாக வேண்டும், அதை விடுத்து நானே எனது பெயரை வேட்பாளராக அறிவித்துக் கொண்டால் சுய சேவை போல் ஆகி விடும்.

#TamilSchoolmychoice

எனவே, வரும் பொதுத்தேர்தலில் ம.சீ.ச பிரச்சாரங்களில் முழு நேர  தலைவராக செயல்பட்டு, தேசிய முன்னணி மற்றும் ம.சீ.ச வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரப் போராடுவேன். ஆனால் தேர்தலில் போட்டியிடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் சுவா கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை லாபீஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.