Home One Line P1 கொவிட்-19: சிங்கப்பூரில் 528 சம்பவங்கள் பதிவு!

கொவிட்-19: சிங்கப்பூரில் 528 சம்பவங்கள் பதிவு!

921
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்கள்  சம்பந்தப்பட்ட ஆறு சம்பவங்கள் உட்பட கூடுதல் 528 புதிய கொவிட் -19 நோய்த் தொற்றுகளை சிங்கப்பூர் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையில், இந்த விவரங்களை இன்னும் விசாரித்து வருவதாகவும், மேல் விபரங்கள் தொடர்ந்து பகிரப்படும் என்றும் அறிவித்தது.

இன்றைய திடீர் அதிகரிப்பு சம்பவங்களில் பெரும்பான்மையானவை அந்நியத் தொழிலாளர் தங்கும் விடுதி குடியிருப்பாளர்களினால் ஏற்பட்டதாகும். இதனைத் தொடர்ந்து குடியரசில் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 16,169 பேருக்கு உயர்ந்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

புதன்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிங்கப்பூரர்களிடையே புதிய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக அது குறிப்பிட்டிருந்தது.