Home One Line P2 இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 18 வரை நீட்டிப்பு

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 18 வரை நீட்டிப்பு

775
0
SHARE
Ad

புது டில்லி: கொவிட்-19 தொற்று காரணமாக இந்தியாவில் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு மே 4- க்கு அப்பால் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள் நேற்று வெள்ளிக்கிழமை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. நாட்டில் சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்கள் முறையைப் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு மண்டலங்கள் அயாயகரமான பகுதிகளாக கருதப்படுகின்றன, அதே நேரத்தில் குறைந்த ஆபத்தானதாகக் கருதப்படும் பகுதிகளில் கணிசமான தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

மார்ச் 24 முதல் இந்தியா ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளது, தேசிய அளவில் 35,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மே 18 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்தது 1,100 பேர் இந்த தொற்று நோயால் இறந்துவிட்டதாக அறியப்படுகிறது, ஆனால் உண்மையான தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதை விட மிக அதிகம் என்று பலர் நம்புகின்றனர்.

1.3 பில்லியன் மக்களைக் கொண்டுள்ள இந்தியாவின் ஊரடங்கு உத்தரவு உலகிலேயே மிகப் பெரியது.