Home One Line P2 இராமாயணம் : உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி

இராமாயணம் : உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி

852
0
SHARE
Ad

புதுடில்லி – 1990-ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சியில் இந்தியில் ஒளிபரப்பாகி கோடிக்கணக்கானோர் பார்த்து இரசித்த தொலைக்காட்சித் தொடர் இராமாயணம்.

பிரபல இந்திப் பட இயக்குநர்-தயாரிப்பாளர் ராமானந்த் சாகரின் கைவண்ணத்தில் உருவான இந்தத் தொடர் தற்போது மீண்டும் இந்தியத் தொலைக் காட்சி அலைவரிசைகளில் வலம் வரத் தொடங்கியிருக்கிறது

கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடுகளால் இந்திய மக்கள் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் வேளையில் அவர்களை மகிழ்விக்க மீண்டும் ஒளிபரப்பானது இராமாயணம் தொடர்.

#TamilSchoolmychoice

இதன் மறு ஒளிபரப்புக்கு சில எதிர்ப்புகள், கண்டனங்கள் ஆங்காங்கே எழுந்தாலும் இப்போதைக்கு இந்தியாவில் அதிகம் மக்களால் பார்க்கப்படும் தொலைக் காட்சித் தொடராக இராமயணம் திகழ்கிறது.

கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி ஒளிபரப்பான இராமயணத் தொடரை அன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 77 மில்லியன் பேர்கள் பார்த்திருக்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இராமாயணம் சாதனை படைத்துள்ளது.