Home One Line P2 இந்தியாவில் ஒரே நாளில் 2,600 மேற்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் – மரண எண்ணிக்கை 1,301

இந்தியாவில் ஒரே நாளில் 2,600 மேற்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் – மரண எண்ணிக்கை 1,301

707
0
SHARE
Ad

புதுடில்லி – இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் நேற்று சனிக்கிழமை (மே 2) இந்தியாவில் கொவிட்-19 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டன.

இதைத் தொடர்ந்து நாட்டில் மொத்த கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 39,980 ஆக உயர்ந்திருக்கிறது. மரண எண்ணிக்கை 1,301 ஆக உயர்ந்திருக்கிறது.

தற்போது 28,046 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,633 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகராஷ்டிரா திகழ்கிறது. ஒரே நாளில் 790 பேர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு நேற்று மட்டும் இலக்காகியுள்ளனர். சனிக்கிழமை மட்டும் 36 பேர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 12,296 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு நிற மண்டலங்களில் மட்டும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை தளர்வு செய்ய மாநில அரசாங்கங்கள் தயாராகி வருகின்றன.