Home One Line P2 சிங்கப்பூர் : 657 புதிய கொவிட் – 19 பாதிப்புகள் பதிவு

சிங்கப்பூர் : 657 புதிய கொவிட் – 19 பாதிப்புகள் பதிவு

641
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்கள்  சம்பந்தப்பட்ட 10 சம்பவங்கள் உட்பட 657 புதிய கொவிட் -19 நோய்த் தொற்றுகளை சிங்கப்பூர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 3) வரையில் பதிவு செய்துள்ளது.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வழக்கம்போல் அந்நியத் தொழிலாளர்களாவர்.

இதனைத் தொடர்ந்து குடியரசில் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 18,205 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விவரங்களை வெளியிட்டிருக்கும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், ஒரு சில தொழில்கள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.