கோலாலம்பூர்: தலைநகரின் பெவிலியன் எம்பசி கட்டுமான இடத்தில் கொவிட்19 பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழு காணாமல் போய் உள்ளனர்.
கட்டுமான இடத்திலிருந்து 145 தொழிலாளர்கள் தப்பி ஓடிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
” காவல் துறையினர் அந்த பகுதியை முற்றுகையிட சென்று கொண்டிருந்தபோது, மருத்துவ குழு ஒரு பரிசோதனையை நடத்திய பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.” என்று அவர் எப்எம்டிக்கு தெரிவித்தார்.
இருப்பினும், பரிசோதனையின் போது அதிகாரிகள் அவர்களின் விவரங்களை எடுத்துக் கொண்டதாகவும், அதன் முடிவுகள் இன்று அறியப்படலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், 11 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் எப்எம்டியிடம் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்று ஏற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் ஒரு தங்கும் விடுதியில் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சாந்தாரா தெரிவித்தார்.