Home One Line P2 டோம் குருஸ் நடிக்க, விண்வெளியில் முதல் படப்பிடிப்பு

டோம் குருஸ் நடிக்க, விண்வெளியில் முதல் படப்பிடிப்பு

728
0
SHARE
Ad

நியூயார்க் – ஆங்கிலத் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் உலகின் எல்லா மூலைகளிலும் நடத்தப்பட்டிருக்கின்றன. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால் டோம் குரூஸ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் விண்வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி பரிசோதனைக் கூடத்தில் நடைபெறும். இதனை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் முதல் நடிகராகவும் டோம் குருஸ் திகழக் கூடும்.

டோம் குரூஸ் நடிக்கும் ஆங்கிலப் படம் ஒன்றின் படப்பிடிப்பை விண்வெளியில் நடத்த நாசா முன்னேற்பாடுகள் செய்துவருவதை நேற்று செவ்வாய்க்கிழமை (6 மே) நாசா உறுதி செய்தது.

#TamilSchoolmychoice

விண்வெளியில் தற்போது பூமியிலிருந்து 250 மைல்களுக்கப்பால் இயங்கி வரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சி பரிசோதனைக் கூடத்திற்கு டோம் குரூஸ் கொண்டு செல்லப்படுவார் அங்கு படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும் நாசா தெரிவித்தது. அந்த விண்வெளி பரிசோதனைக் கூடம் பல பில்லியன் டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

அந்த விண்வெளி பரிசோதனைக் கூடத்தில் பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சுழல் முறையில் கடந்த காலத்தில் தங்கியிருந்திருக்கிறார்கள். ஒருசிலர் பணம் செலுத்தி சுற்றுப் பயணிகள் போன்று சென்று தங்கி திரும்பியிருக்கிறார்கள்.

சில படங்களின் படப்பிடிப்புகளும் இந்தப் பரிசோதனைக் கூடத்தில் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் விண்வெளிக்குப் பறந்து செல்லும் முதல் நடிகராக டோம் குரூஸ் திகழ்வார். அவர் குழுவாகப் பயணம் செய்வாரா அல்லது தனியாக விண்வெளிக்கு செல்வாரா என்பது போன்ற விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.