Home One Line P2 ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

740
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் நாட்களில் ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவிருக்கும் சிறந்த நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை ஆஸ்ட்ரோ வெளியிட்டிருக்கிறது.

திங்கள், 11 மே

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் (Gangs of Madras) (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

நூசுல் அல்-குரான் தின சிறப்பு நிகழ்ச்சி

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 1.30 பிற்பகல் | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பிரியங்கா ரூத், டேனியல் பாலாஜி & அசோக்

போலிஸ் என்கவுண்டரில், தனது கணவனையும் பிறக்காத குழந்தையையும் இழந்த ரைசா, தனது அன்புக்குரியவர்களின் மரணத்திற்கு காரணமான குண்டர்களை பழிவாங்கத் தொடங்குகிறார்.

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம்

நூசுல் அல்-குரான் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 5.30 மாலை | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சிம்பு, ரம்யா கிருஷ்ணன், பிரபு, கேத்தரின் திரேசா & மேகா ஆகா

ஒரு பணக்காரக் குடும்பத்தின் இளம் வாரிசான ஆதி, தனது தாத்தாவை நீண்ட காலத்திற்கு முன்பு தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்த அவரது மகள் நந்தினியுடன் மீண்டும் ஒன்றிணைப்பதாக உறுதியளிக்கிறார். தனது வாக்குறுதியை நிறைவேற்ற, ஆதி தனது அத்தை நந்தினியின் வீட்டில் ஒரு ஓட்டுநராக பணியில் சேர்கிறார். ஆனால், விரைவில் தனது தாத்தாவுடன் தன் அத்தையை மீண்டும் ஒன்றிணைப்பதில் சிக்கலை எதிர்கொள்கிறார்.

ஆதித்ய வர்மா (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

நூசுல் அல்-குரான் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.30 இரவு | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: துருவ், பனிதா சந்து & பிரியா ஆனந்த்

காதலியின் குடும்பத்தினர் அவர்களின் காதலை எதிர்த்து அவன் காதலியை பலவந்தமாக மற்றொருவருக்கு திருமணம் செய்து வைக்க, ஒரு புத்திசாலியான கோபம் குணம் நிறைந்த இளம் அறுவை சிகிச்சை மருத்துவர் மது அருந்துதல், போதைப்பொருள் மற்றும் பல வன்முறைகளில் ஈடுபடுகிறான்.

செவ்வாய், 12 மே

குப்பத்து ராஜா

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), 9.00 மணி இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒரு குப்பத்து குடியிருப்பாளரான ராக்கெட் அதே பகுதியில் வசிக்கும் கமலாவைக் காதலிக்கிறார். ஒரு கும்பல் தலைவரான எம்.ஜி.ராஜேந்திரனுடன் மோதல் ஏற்பட அவரது வாழ்க்கை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

வியாழன், 14 மே

பாகல்பந்தி (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9pm  | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அனில் கபூர், ஜான் ஆபிரகாம் & இலியானா டி க்ரூஸ்

தோல்வியுற்றவர்கள் என சமுதாயத்தால் அடையாளமிடப்பட்ட மூன்று ஆண்கள், இரண்டு குண்டர்களைக் கொள்ளையடிப்பதன் மூலம் விரைவாக பணம் சம்பாதித்து தங்கள் காதலிகளுடன்  இணைந்து பணக்காரர்களாக முயற்சிக்கிறார்கள். அவர்கள் நால்வரும் தங்கள் கனவை அடைய மிக கவனமாக திட்டம் தீட்டுகின்றனர்.

வெள்ளி, 15 மே

சண்டிமுனி (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் & மனிஷா யாதவ்

நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் மனிஷா யாதவ் நடித்த திருமணமான தம்பதியரை பற்றிய நகைச்சுவைத் திகில் திரைப்படம். மனிஷா யாதவ் காலமான பிறகு, அவரது ஆன்மா தனது கணவருடனே பேயாக வாழ்கிறது.

சனி, 16 மே

ராட்சசி (அலைவரிசை ப்ரிமியர்) *ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), 9.00 மணி இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார் & ஜோதிகா

ஒரு கிராமப்புற அரசுப்பள்ளி தலைமையாசிரியர், அப்பள்ளியை அதன் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறார். அவர் தனது சக பணியாளர்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி அப்பள்ளியைச் சீர்திருத்துகிறார்.

School Day Jolly Day *ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 7.30 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சசி

ஆசிரியர் தினத்தை ஒன்றாகக் கொண்டாட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சி. ஆசிரியர்களை அங்கீகரிப்பதைத் தவிர, இவ்விளையாட்டு நிகழ்ச்சி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அற்புதமான பிணைப்பை மிக அழகாக எடுத்துக்காட்டும்.

Legends of India S2 : Aryabhatta *ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 11.00 மணி காலை | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சங்கக் காலத்தில், இந்திய கணிதம் மற்றும் வானியலில் முதன்மை வகித்த கணிதவியலாளர்-வானியலாளர் ஆர்யப்பட்டாவைப் பற்றிய புராணக் கதை நிகழ்ச்சி.

சாட்டை *ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 1.30pm  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சமுத்திரகனி & தம்பி ராமையா

தயாளன் என்ற ஆசிரியர் ஓர் அரசுப் பள்ளியில் நடந்து வரும் முறைகேடுகளை மாற்ற முயற்சிக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, அவரது செயல்களை ஒரு சில மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்கவில்லை. இது அவர்களுக்கு இடையே விரிசலுக்கு வழிவகுக்கிறது.

Legends of India S1 : Srinivasa Ramanujan *ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 4.00 மணி மாலை | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

இந்திய கணிதவியலாளரும் சுய கல்வியாளருமான சீனிவாச ராமானுஜன் பற்றிய நிகழ்ச்சி. தூய கணிதத்தில் அவருக்கு முறையான பயிற்சி இல்லை என்றாலும், கணித பகுப்பாய்வில் அசாதாரண பங்களிப்புகளை வழங்கினார்.