சிங்கப்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு கூடுதலாக இன்று 768 சம்பவங்கள் சிங்கப்பூரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக அக்குடியரசில் மொத்தமாக இதுவரையில் 21,707 சம்பவங்கள் பதிவாகி உள்ளது.
புதிய பாதிப்புகளில் 10 சம்பவங்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களை உள்ளடக்கியது என்று குடியரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பெரும்பான்மையான சம்பவங்கள் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவை என்று அது குறிப்பிட்டது.
இந்த வாரம் தொடங்கி, படிப்படியாக, சில இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு கொடுத்து, ஜூன் 1 அன்று கட்டுப்பாட்டுக் காலம் முடிவடைந்த பின்னர் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை பாதுகாப்பாகவும், படிப்படியாகவும் தொடங்க சிங்கப்பூர் குடியரசு தயாராகி வருகிறது.