Home One Line P1 கொவிட்19: உலகளவில் நேர்மறை சம்பவங்கள் 3.91 மில்லியனாகப் பதிவு

கொவிட்19: உலகளவில் நேர்மறை சம்பவங்கள் 3.91 மில்லியனாகப் பதிவு

431
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்19 நேர்மறை சம்பவங்கள் 3.91 மில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானில் 100,000 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, 100,000 எண்ணிக்கைகளைத் தாண்டிய நாடுகள் இப்போது 10 என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவு காட்டுகிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களைக் கொண்ட ஒரே நாடு அமெரிக்கா. இப்போது அங்கு 1.27 மில்லியன் நேர்மறையான சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

#TamilSchoolmychoice

மூன்று நாடுகள் இப்போது 200,000 சம்பவங்களைத் தாண்டியுள்ளன. அதாவது ஸ்பெயின் 221,000, இத்தாலி 217,000 மற்றும் பிரிட்டனில் 212,000 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை முறையே 187 ஆயிரம், 174 ஆயிரம் மற்றும் 170 ஆயிரம் நேர்மறையான வழக்குகளைப் பதிவு செய்தன.

இந்த தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியன் சம்பவங்களாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.