கோலாலம்பூர்: கொவிட்19 பரவுவதைத் தடுக்க கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா பகுதிகளை கண்காணிக்க, சுகாதார அமைச்சுக்கு உதவும் பொருட்டில், 926 அதிகாரிகள் மற்றும் காவல் துறை பணியாளர்கள் அடங்கிய மொத்தம் 142 நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இணக்க குழுக்கள் உதவுகின்றன என்று கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம் தெரிவித்தார்.
நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில், 13 தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் இருப்பதாக அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மக்களை ஒன்றுக் கூடச்செய்யவும், உடல் ரீதியான தொடர்பு மற்றும் சமூக தூரத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும், பொழுதுபோக்கு, ஓய்வு, மதம், கலாச்சாரம், கலைகள் மற்றும் வணிகம் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட அனைத்து பொருளாதாரத் துறை மற்றும் வணிக நடவடிக்கைகள், அதிகாரிகள் நிர்ணயித்த விதிகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்பட அனுமதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
இயக்க நடைமுறையில் உள்ளபடி, கூடல் இடைவெளி, தவறாமல் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிவதுடன், கொவிட்19 தொற்று குறித்த எந்தவொரு தகவலையும் உடனடியாக சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிப்பது, குழந்தைகள், மூதியோர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்ற உயர் ஆபத்துள்ள பிரிவினருக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 தொடர் சங்கிலியை உடைக்கும் பொருட்டு, இந்த ஆணைக்கு இணங்கவும், காவல் துறையினருடன் ஒத்துழைக்கவும் மஸ்லான் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.