Home One Line P1 “எங்களின் போராட்டம் தொடரும்” – மகாதீர், அன்வார் கூட்டாக அறிக்கை

“எங்களின் போராட்டம் தொடரும்” – மகாதீர், அன்வார் கூட்டாக அறிக்கை

608
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று மே 9 மலேசியாவின் வரலாற்றுபூர்வ நாளாகும். 2018-ஆம் ஆண்டு மே 9-இல் நடைபெற்ற பொதுத் தேர்தல் முதன் முறையாக சுதந்திரத்திற்குப் பின் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது.

அந்த நாளின் இரண்டாவது ஆண்டு நிறைவு நாளான இன்று அந்த ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய முகங்களாக இருந்த துன் மகாதீரும், அன்வார் இப்ராகிமும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

ஜனநாயக முறைப்படி தாங்கள் பெற்ற வெற்றியானது அண்மையில் சட்டத்துக்குப் புறம்பாகவும், ஜனநாயக நடைமுறைகளுக்குப் புறம்பாகவும் கைப்பற்றப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும் மக்களுக்காக தங்களின் ஜனநாயகப் போராட்டம் இனியும் தொடரும் என்றும் அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் வண்ணம் நாங்கள் நடத்திய போராட்டம் போன்று மீண்டும் எழுந்து நின்று போராடி மக்கள் எந்த அரசியல் கட்சிக்கு அதிகாரத்தை வழங்கினரோ அதே கட்சிக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என மகாதீரும், அன்வாரும் தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

அண்மையக் கால சம்பவங்களைத் தொடர்ந்து மகாதீரும் அன்வாரும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

9 மே 2018 தேதியை நாம் மறந்துவிடக் கூடாது. அன்றுதான் புதிய மலேசியா உதயமானது. மலேசிய மக்களின் வெற்றியாக அந்த நாள் கருதப்படுகிறது என்றும் அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து எதிர்வரும் மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தின்போது மகாதீர் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணியும் ஆதரித்து வாக்களிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.