Home One Line P1 கொவிட்19 உதவி நிதி திட்டம் – 40.2 மில்லியன் திரட்டப்பட்டது

கொவிட்19 உதவி நிதி திட்டம் – 40.2 மில்லியன் திரட்டப்பட்டது

453
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மார்ச் 11- ஆம் தேதி தொடங்கப்பட்ட கொவிட்19 நிதி உதவி திட்டத்தின் கீழ், மே 7- ஆம் தேதி வரை பல தரப்பினர் அளித்த நன்கொடைகளில் 40.2 மில்லியன் ரிங்கிட்டை திரட்ட முடிந்தது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

சிறப்பு பேரிடர் நிவாரணம் மற்றும் இறப்புக்கான உதவி மூலம் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு உதவ இந்த நன்கொடைகள் அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

“இந்த உதவிக்கு தகுதியுள்ளவர்கள் மலேசியர்கள், அவர்கள் வேலை செய்பவர்கள், ஆனால் வருமானத்தை இழந்தவர்கள் அல்லது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் ஊதியம் செலுத்தப்படாதவர்கள் மற்றும் சுகாதார அமைச்சினால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட்19 காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் தங்கியிருந்ததாலும், வருமான ஆதாரத்தை இழந்தவர்கள் இந்த உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு ஒரு நாளைக்கு 100 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

இதுவரை 94 நபர்கள் 125,700 ரிங்கிட் உதவியை பெற்றுள்ளனர்.

கொவிட்19 பாதிப்பால் மரணமுற்றவர்களின் 71 குடும்ப உறுப்பினர்கள் 355,000 ரிங்கிட் உதவி நிதியைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.