Home One Line P2 தூத்துக் குடியில் ஊரடங்கில் சிக்கிக் கொண்ட 11 பெண்மணிகளைக் காப்பாற்றிய நடிகர் விஜய்

தூத்துக் குடியில் ஊரடங்கில் சிக்கிக் கொண்ட 11 பெண்மணிகளைக் காப்பாற்றிய நடிகர் விஜய்

929
0
SHARE
Ad

சென்னை – கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு – ஊரடங்கு – ஆகியவற்றால் தூத்துக்குடியில் சிக்கிக் கொண்ட 11 பெண்கள் நடிகர் விஜய்யின் முயற்சியால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்தப் பெண்கள் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ஒருமாதத்திற்கு முன்னர் சென்றிருக்கின்றனர்.

அங்கு சென்ற பின் நாடெங்கிலும் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் சென்னைக்குத் திரும்ப முடியாமல்  தூத்துக்குடியிலேயே இந்தப் பெண்கள் சிக்கிக் கொண்டனர். இந்தப் பெண்களில் ஒருவர் தேவிகா என்பவர். இவரைத் தவிர மற்ற பெண்கள் யாவரும் 20 வயதுக்குக் கீழ் உள்ளவர்களாவர்.

#TamilSchoolmychoice

கடந்த ஒருமாதமாக சொந்த செலவில் தூத்துக்குடியில் தங்கியிருந்த இந்தப் பெண்கள் கால ஓட்டத்தில் தங்கள் கைவசம் இருந்த பணமும் கரைந்து போக, உள்ளூர் விஜய் இரசிகர் மன்றத்தினரைத் தொடர்பு கொண்டு உதவி கோரியிருக்கின்றனர்.

ரசிகர் மன்றத்தினர் விஜய்க்குத் தகவல் தெரிவிக்க அவரும் அந்தப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் மீண்டும் சென்னைக்கு பத்திரமாகத் திரும்ப தகுந்த ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அந்தப் பெண்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தத் தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட, விஜய்க்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியிருக்கின்றன.