Home One Line P1 புதிய தொற்றுக் குழுக்கள் தோன்றாமல் இருக்க மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்

புதிய தொற்றுக் குழுக்கள் தோன்றாமல் இருக்க மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்

484
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பிலிருந்து மீண்ட நாடுகளில், புதிய தொற்றுக் குழுக்கள் தோன்றுவது மலேசியாவின் கவலைக்கு ஒரு காரணம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் -19 சங்கிலியை உடைப்பதற்காக மலேசியர்கள் “ஒன்று கூடி” கூடல் இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மீண்டும் கேட்டுக் கொண்டார்.

“உண்மையில், கொவிட் -19 இரண்டாவது அலை தோன்றுவது குறித்து பல நாடுகள் கவலை கொண்டுள்ளன.” என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

#TamilSchoolmychoice

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் முதல் கட்டங்களில் நாட்டில் சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்க மலேசியா சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

“பொறுப்பு அரசாங்கத்தின் மீது அல்ல, ஆனால், ஒவ்வொரு தனிநபரின் மீதும் உள்ளது. சமூக இணக்கம் மற்றும் ஒழுக்கம் முக்கியம். சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான இயக்க நடைமுறையை நாம் அனைவரும் கடைப்பிடித்தால், சம்பவங்களைன் எண்ணிக்கையை மேலும் கீழே கொண்டு வரலாம்.”

“எங்களுக்கு இரண்டாவது அலை இருக்கிறதா இல்லையா என்பது அமைச்சிடம் மட்டுமல்ல, பொறுப்பு பொதுமக்களிடமும் உள்ளது, ”என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

சீனாவிலும் தென் கொரியாவிலும் புதிய கொவிட் -19 தொற்றுகள் தோன்றுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

எவ்வாறாயினும், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மலேசியர்கள் தங்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதில் டாக்டர் நூர் ஹிஷாம் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.