Home One Line P1 கெடா: 2 பிகேஆர் உறுப்பினர்களிடமிருந்து 10 மில்லியன் கோரப்படும்

கெடா: 2 பிகேஆர் உறுப்பினர்களிடமிருந்து 10 மில்லியன் கோரப்படும்

446
0
SHARE
Ad

சுங்கை பட்டாணி: இரண்டு கெடா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் செவ்வாயன்று கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருடின் மற்றும் சீடாம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரோபர்ட் லிங் குய் ஈ ஆகியோர் 14- வது பொதுத் தேர்தலில் மக்கள் ஆணையை மீறியுள்ளதாக கெடா நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டத்தோ ஜோஹாரி அப்துல் குறிப்பிட்டார்.

“இந்த இருவரும், வேட்பாளர்களாக இருப்பதற்கு முன்னர், அவர்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்துக் கொண்டு, ஆவணத்தில் கையெழுத்திட்டனர் என்பதை இங்கு உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.”

#TamilSchoolmychoice

“அதாவது, அவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சிக்குத் தாவினால், அவர்கள் நடவடிக்கையை எதிர்கொள்வார்கள். துரோகத்திற்காக பிகேஆர் கட்சிக்கு இருவரும் தலா 10 மில்லியன் ரிங்கிட்டை வழங்க நேரிடும்” என்று ஜோஹாரி கூறினார்.

முன்னதாக செவ்வாயன்று, அஸ்மான் மற்றும் ரோபர்ட் கட்சி மீதான நம்பிக்கையை இழந்ததன் அடிப்படையில் கட்சி வெளியேறுவதாக அறிவித்தனர்.

பெர்சாத்து கட்சியின் தலைவரான பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையை ஆதரிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

சமீபத்திய ஆண்டுகளில் பிகேஆர் கட்சி அதன் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தல் அல்லது பதவி நீக்கம் செய்வது தொடர்பான பல தொடர்ச்சியான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்சி போராட்டத்திற்கு துரோகம் விளைவிக்கும் குழுக்கள் இன்னும் கட்சியில் இருப்பதை இது காட்டுவதாக ஜோஹாரி கூறினார்.