மலாக்கா: மாநில சட்டமன்ற சபாநாயகராக மலாக்கா அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் யூசோ, மற்றும் ரிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ கசாலி முகமட்டை துணை சபாநாயகராகவும் நியமித்தது குறித்து சவால் செய்ய நம்பிக்கைக் கூட்டணி வழக்கு தொடுக்க உள்ளது.
நம்பிக்கைக் கூட்டணி விரைவில் டத்தோ ஒமார் ஜாபர் மற்றும் டத்தோ டாக்டர் வோங் போர்ட் பின் மூலம் ஓர் ஆரம்ப சம்மன் அனுப்ப உள்ளதாக மலாக்கா நம்பிக்கைக் கூட்டணி தலைவர் அட்லி சாஹாரி தெரிவித்தார். இன்னும் அவர்களே மலாக்கா மாநில சட்டமன்றத்தின் முறையான சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் என்று அவர் கூறினார்.
ஒமாருக்கு பதிலாக தேசிய கூட்டணி உறுப்பினர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என்று தேசிய கூட்டணி உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹரோன் தலைமையில் குறிப்பிட்டதை அடுத்து, திங்கட்கிழமை, மாநில சட்டமன்ற அமர்வில் குழப்பம் ஏற்பட்டது.
கலந்துரையாடலின் பின்னர், 28 சட்டமன்ற உறுப்பினர்களில் 16 பேரின் ஆதரவைப் பெற்ற பின்னர் புதிய சபாநாயகராக அப்துல் ராவூப் நியமிக்கப்பட்டார்.