வாஷிங்டன்: உலகளவில் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 6,000 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.
மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 290,000 சம்பவங்களை தாண்டியுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, மூன்று நாடுகள் இப்போது 30,000 மரண எண்ணிக்கையை தாண்டியுள்ளன.
81,000- க்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்து, அதிக இறப்பு ஏற்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
பிரிட்டன் மற்றும் இத்தாலி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. அங்கு 32,000 மற்றும் 30,000 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளது. அங்கு 26,000 சம்பவங்கள் உள்ளன.