Home One Line P1 சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமு வேட்பாளரை நிறுத்தும்

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமு வேட்பாளரை நிறுத்தும்

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வரவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரை நிறுத்த கூட்டணி முடிவு செய்துள்ளது என்று அக்கூட்டணியின் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

முந்தைய இடைத்தேர்தல்களைப் போலவே பாஸ் உடன் உடன் தொடர்ந்து தேசிய முன்னணி பணியாற்றும் என்று அவர் கூறினார்.

“கடந்த செவ்வாயன்று தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“நாடு இன்னும் நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே, தேசிய முன்னணி சில மாற்றங்களைச் செய்யும். இதனால் எந்தவொரு முன்மொழியப்பட்ட பிரச்சாரமும் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க முழுமையாக செய்யப்படும்” என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆரம்பப் பணிகளை மாநில அளவில் தொடங்கியுள்ளதாகவும், பகாங் தேசிய முன்னணி தலைவரான பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இடைத்தேர்தலுக்கு தேசிய முன்னணி இயக்குநராக செயல்படுவார் என்றும் அன்வார் விளக்கினார்.

மே 7-ஆம் தேதி மாரடைப்பால் மரணமுற்ற டத்தோஸ்ரீ அபுபக்கர் ஹாருன் இறந்ததைத் தொடர்ந்து சினி சட்டமன்றம் காலியானது .