கோலாலம்பூர்: கெராக்கான் கட்சி நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் மொகிதின் யாசினுக்கு முறையாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இன்று ஓர் அறிக்கையில், கட்சியின் தலைவர் டொமினிக் லாவ் ஓர் இணைய ஊடக சந்திப்பின் போது இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்.
நாட்டின் அரசியல் அதிகாரத்தின் மீதான கெராக்கான் கட்சியின் அதிகாரம் அரிக்கத் தொடங்குவதற்கு, 1969 முதல் 2008- க்கு இடையில் பினாங்கை ஆட்சி மாநிலமாக அக்கட்சி கொண்டிருந்தது.
2018 பொதுத் தேர்தலில், கெராக்கான் எந்த நாடாளுமன்ற இடத்தையும் வெல்லவில்லை. இதன் விளைவாக, அக்கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகியது.