Home One Line P1 “மனசாட்சிபடி கட்சிக்காகப் போராட மகாதீர் உத்தரவிட்டார்!”- முகமட் பிர்டாவுஸ்

“மனசாட்சிபடி கட்சிக்காகப் போராட மகாதீர் உத்தரவிட்டார்!”- முகமட் பிர்டாவுஸ்

470
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்துவின் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்குப் பிறகு, கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர் (குவா ) முகமட் பிர்டாவுஸ் அகமட், அந்த சந்திப்பிலிருந்து பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றதாக விளக்கினார்.

இருப்பினும், முன்னாள் பிரதமர் மதம், இனம் மற்றும் தாயகத்திற்காக தொடர்ந்து போராடுவார் என்று வலியுறுத்தியதாகக் கூறினார்.

“மகாதீருடனான எனது சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. முக்கியமானது என்னவென்றால், மதம், இனம் மற்றும் தாயகத்திற்காக போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்,.” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

கெடாவில் தேசிய கூட்டணியை ஆதரிப்பாரா என்ற முடிவு குறித்து டாக்டர் மகாதீரின் கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு, டாக்டர் மகாதீர் மனசாட்சிபடி நடந்து கொள்ளுமாறு உத்தரவிட்டதாகக் கூறினார்.

அதே நேரத்தில், தேசிய கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், ஒற்றுமையாக இருப்பதாகவும் முகமட் பிர்டாவுஸ் தெளிவுப்படுத்தினார்.

“துன் உங்களுக்காக அல்ல, கட்சிக்காக போராட உத்தரவிட்டார்.” என்று அவர் கூறினார்.