வாஷிங்டன்: உலகளவில் கொவிட்19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் 6,000 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
இதன் மூலமாக உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 301,000 சம்பவங்களைத் தாண்டியுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி, மூன்று நாடுகள் இப்போது 30,000 மரண எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன.
அமெரிக்க அதிக இறப்பு எண்ணிக்கை உள்ள நாடாக இருக்கிறது. 85,000 மேற்பட்ட இறப்புகள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டன் மற்றும் இத்தாலி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. அங்கு முறையே 33,000 மற்றும் 31,000 இறப்புகள் பதிவாகின.