Home One Line P1 ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்த மாமன்னர் தம்பதியர்

ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்த மாமன்னர் தம்பதியர்

1081
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா ஆகியோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வியாளர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த ஆண்டு தேசிய அளவிலான ஆசிரியர் தின கருப்பொருளான ‘அறிவார்ந்த ஆசிரியமே, புதிய தலைமுறையின் ஆக்கம்’ என்ற கருப்பொருளை மேற்கோளிட்டு பேசியுள்ளார்.

தேசிய கல்வி தத்துவத்தின் குறிக்கோள்களை பூர்த்தி செய்யும், புதிய தலைமுறையை உருவாக்குவதில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கை இந்த கருப்பொருள் சுட்டிக் காட்டுகிறது.

#TamilSchoolmychoice

தேசிய அரண்மனையின் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளில் இந்த பதிவினை மாமன்னர் தம்பதியர் பதிவிட்டுள்ளனர்.

மலேசியாவில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 16- ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.