Home One Line P1 நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் கொவிட்19 தொற்று இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் கொவிட்19 தொற்று இல்லை

680
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடே பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது  திங்கட்கிழமை கூடவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தை! இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொவிட்19 தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக அந்தப் பரிசோதனைகள் முடிந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கொவிட்19 தொற்று கொண்டிருக்கவில்லை என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், அவைத் தலைவர் உள்ளிட்ட 750 பேர் மீது கொவிட்19 பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. சிலர் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டனர். மகாதீரே ஒரு கட்டத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தேசியக் கூட்டணி ஆட்சி அமைந்ததற்குப் பின்னர் நடத்தப்படும் முதல் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் மே 18-ஆம் தேதி நடைபெறும் கூட்டமாகும்.

காலை 10.00 மணிக்கு மாமன்னரின் உரையோடு தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டம் அந்த உரையோடு நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.