Home One Line P2 தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு

தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு

981
0
SHARE
Ad

சென்னை – தமிழ் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மே 31 வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எனினும் பல மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொவிட்19 தொற்று குறைந்துள்ள 25 மாவட்டங்களில் உள்மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனினும், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துகளுக்கு இன்னும் முன் அனுமதி நடைமுறை கடைப்பிடிக்கப்படுகின்றன.

#TamilSchoolmychoice

போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும் எந்த மாதிரியான வாகனங்களில் எத்தனை பேர் பயணம் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாடுகளும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

டாஸ்மாக் கடைகளில் கோடிக்கணக்கில் மதுபானம் விற்பனை

இதற்கிடையில் டாஸ்மாக் எனப்படும் தமிழக அரசால் நடத்தப்படும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு ஒரே நாளில் அவை மூடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு வெற்றி பெற்றது. மதுபானக் கடைகளைத் திறப்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் இரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை முதல் (மே 16) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கடைகளில் கூட்டம் கூடுவதையும் நீண்ட வரிசைகள் அமைவதையும் தடுக்க ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் முறையில் முன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் மதுபானங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்ற அனுமதியும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒரு நாளில் மட்டும் 1,630 மில்லியன் ரூபாய் மதிப்புடைய மதுபானங்கள் டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனையாகியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.