Home One Line P1 “ரிசா விடுதலைக்கு நான் கண்டிப்பாக அனுமதி அளித்திருக்க மாட்டேன்” – டோமி தோமஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

“ரிசா விடுதலைக்கு நான் கண்டிப்பாக அனுமதி அளித்திருக்க மாட்டேன்” – டோமி தோமஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

600
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் அனுமதி வழங்கி விட்டார் எனக் கூறப்பட்டதால்தான் ரிசா அசிசின் விடுதலைக்கு ஒப்புதல் தந்தேன் என சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடியாக இன்று டோமி தோமஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “நானாக இருந்தால் ரிசா அசிஸ் விடுதலைக்கு ஒப்புதல் தந்திருக்க மாட்டேன். அவ்வாறு செய்வது பிரதமரும், பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணியும் தன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்ததாகியிருக்கும்” என்றும் டோமி தோமஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

இட்ருஸ் ஹாருண்

“ரிசா அசிஸ் கையாடியதாகக் கூறப்படும் பணம் மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும். எனவே, அதை ரிசா திருப்பிக்கொடுப்பதாகக் கூறுவது கேலிக் கூத்தாகும். அவர் திருப்பிக் கொடுக்காவிட்டாலும் கைப்பற்றப்பட்ட அந்தப் பணத்தையும், சொத்துகளையும் அமெரிக்க அரசாங்கம் அந்தப் பணத்தை மீட்டுக் கொடுத்திருக்கும்” என்றும் டோமி விளக்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இது ரிசாவுக்கு ஓர் இனிப்பான உடன்பாடு ஆனால் மலேசியாவுக்கு அல்ல என்றும் டோமி மேலும் கூறினார்.

“முதல் கட்டமாக நான் ரிசா மீதான வழக்குகளை விடுவிக்க எந்தவித ஒப்புதலையும் அளிக்கவில்லை. எனவே, அப்படி ஓர் ஒப்புதல் இருந்ததாக இட்ருஸ் ஹாருண் கருதுவதும் அதை அடிப்படையாக வைத்து ரிசாவை விடுதலை செய்ததாகக் கூறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என்றும் டோமி தெரிவித்தார்.

ரிசா அசிஸ் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் முதல் கணவரின் மகனாவார்.