Home One Line P1 அஸ்மின் அலிக்கு துணைப் பிரதமருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டதா?

அஸ்மின் அலிக்கு துணைப் பிரதமருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டதா?

753
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு அடுத்த நிலையில் அமர்ந்திருந்தார். பொதுவாக பிரதமருக்கு அடுத்த நிலையில் துணைப் பிரதமர்தான் அமர்வார்.

எனவே, துணைப் பிரதமருக்கான அந்தஸ்து அஸ்மின் அலிக்கு வழங்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் கருதப்படுகிறது. தான் தலைமை ஏற்க முடியாத தருணங்களில் அமைச்சரவைக் கூட்டத்தை அஸ்மின் அலியே வழிநடத்துவார் என மொகிதின் ஏற்கனவே ஒருமுறை அறிவித்திருக்கிறார்.

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தின் அமைப்புப் படி கொவிட்-19 பிரச்சனைகளை மனதில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஓர் இருக்கைக்கான இடைவெளி விட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

#TamilSchoolmychoice

அதன்படி மொகிதின் யாசினின் வலதுபுறத்தில் அவருக்கு அடுத்த இருக்கையில் அஸ்மின் அலி அமர்ந்திருந்தார்.

இதனை அடுத்து, அஸ்மின் அலி துணை பிரதமர் நிலையில் அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கிறார் என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அஸ்மினின் வலதுபுறத்தில் மற்ற முக்கிய அமைச்சர்களான, இஸ்மாயில் சப்ரி யாகோப் (பாதுகாப்பு), பாடில்லா யூசோப் (உள்கட்டமைப்பு) மற்றும் ராட்ஸி ஜிடின் (கல்வி) ஆகியோர் அமர்ந்திருந்தனர்.