கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தல் வரை தற்போதைய அரசாங்கம் நிலைக்க முடியாது என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கருத்து தெரிவித்தார்.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றாலும், பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்துவதற்கான சாத்தியக்கூறுடன் அரசாங்கம் இன்னும் கவலை கொண்டுள்ளது என்று அன்வார் கூறினார்.
அரசாங்கத்தின் தலைமையின் நியாயத்தன்மையையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தற்போதைய அரசாங்கம் உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், அவர்கள் வழக்கமான முறையில் நாடாளுமன்ற அமர்வை அனுமதிப்பார்கள்.”
“நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே, அரசாங்கத்தின் நிலையை கேள்விக்குட்படுத்த வேண்டும்” என்று புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அன்வார் கூறினார்.
இதற்கிடையில், மொத்தம் 222 பேரில், அதன் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதை உறுதி செய்வதில் நம்பிக்கைக் கூட்டணி கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.