Home One Line P2 கொவிட்19: சிங்கப்பூரில் 451 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்19: சிங்கப்பூரில் 451 புதிய சம்பவங்கள் பதிவு

625
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக கூடுதல் 451 நேர்மறையான சம்பவங்கள் இன்று பதிவாகி உள்ளது. இதனிடையே, அக்குடியரசில் இந்த தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 28,794- ஆக உயர்ந்துள்ளது.

இன்று நண்பகல் வரை, ஒரு சம்பவம் மட்டுமே சிங்கப்பூர் அல்லது நிரந்தர வதிவிடத்துடன் தொடர்புடையது, மீதமுள்ளவை வெளிநாட்டினர் தங்குமிடங்களில் சம்பந்தப்பட்டது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்களின் காரணம் குறித்த விவரங்கள் இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும், மேலும் தகவல்கள் பின்னர் பகிரப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

நேற்று பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அதன் முழு தரவுகளில், 9,835 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளதாகவும், மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.