Home One Line P1 “உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்

“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்

800
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு நாட்டில் மூன்று மாமன்னர்கள், மூன்று பிரதமர்கள் மற்றும் மூன்று வெவ்வேறு அரசாங்கங்களோடு மேலவைத் தலைவராக செயல்படுவது என்பது உலக அளவிலேயே வரலாற்று பூர்வமான, எப்போதோ அரிதாக நிகழக் கூடிய சம்பவங்களாகும்.

இந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவரும், மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவருமாகிய டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ஆவார்.

சிறந்த நிர்வாகத் திறனாலும், மேலவையைத் தனது பதவிக் காலத்தின்போது கட்டுக்கோப்பாக வழி நடத்திய பாங்கினாலும், தனி மரியாதையைப் பெற்று மலேசிய நாட்டுக்கு உயரிய கௌரவத்தை பெற்றுத் தந்துள்ளார் என்பது வெள்ளிடை மலையாகும்.

#TamilSchoolmychoice

இவரின் மேலவைத் தலைவர் பதவி ஜூன் மாதம் முடிவடையும் தருணத்தில், பிரதமர் மொகிதின் யாசின் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு மிக உயரிய பதவியை வழங்கி சிறப்பிக்க வேண்டும் என மஇகா முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர்
எஸ்.பி.மணிவாசகம் (படம்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தகைய நியமனம் இந்திய சமுதாயத்திற்கு கிடைத்திடும் மிகப் பெரிய அங்கீகாரமாக அமையும் என்றும் மணிவாசகம் வர்ணித்தார்.

விக்னேஸ்வரனுக்கு ஓர் உயரிய நியமனத்தை இந்திய சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றது என்பதனை பிரதமர் கவனத்தில் கொண்டு சிறந்த முடிவை எடுப்பார் என எஸ்.பி.மணிவாசகம் நம்பிக்கை தெரிவித்தார்.