கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று காலை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் வாராந்திர அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை காணொளி அமர்வின் மூலம் நடத்தினார்.
கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நாடு அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சந்திப்புக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு தொடங்கிய பிரதமருடனான இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது.
அமர்வின் முடிவில், மாமன்னர் தனது நோன்பு பெருநாள் வாழ்த்தினை பிரதமர் மொகிதின் யாசின் தம்பதியினர் மற்றும் அமைச்சரவை மற்றும் அரசாங்க நிர்வாக உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொண்டதாக அரண்மனை தரப்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
தனது பதிலில், மாமன்னர் தம்பதியினருக்கு பிரதமர் மொகிதின் யாசின் தமது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.