Home One Line P1 ஜோ லோவுக்கு சொந்தமான சொகுசு அடுக்குமாடி வீடு 45 விழுக்காடு கழிவுடன் விற்கப்பட்டது

ஜோ லோவுக்கு சொந்தமான சொகுசு அடுக்குமாடி வீடு 45 விழுக்காடு கழிவுடன் விற்கப்பட்டது

555
0
SHARE
Ad

வாஷிங்டன்: மலேசியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபரான ஜோ லோக்கு சொந்தமான ஒரு சொகுசு அடுக்குமாடி வீட்டை அமெரிக்க அரசாங்கம் 45 விழுக்காடு தள்ளுபடியில் விற்றுவிட்டதாக நியூயார்க் வீட்டு மனை செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

102 பிரின்ஸ் ஸ்ட்ரீட்டில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அந்த குடியிருப்பு, 118 கிரீன் ஸ்ட்ரீட் என்றும் அழைக்கப்படுகிறது. அநாமதேய நிறுவனத்திற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ( 33.1 மில்லியன் ரிங்கிட்) விற்கப்பட்டது என்று ரியல் டீல் கூறியது.

2014-ஆம் ஆண்டில் ஜோ லோ இந்த இடத்திற்கு செலுத்திய தொகை அமெரிக்க டாலர் 13.8 மில்லியன் ஆகும் (60.15 மில்லியன் ரிங்கிட் ).

#TamilSchoolmychoice

அவர் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் வாங்கிய பல ஆடம்பர சொத்துக்களில் இதுவும் ஒன்றாகும். 1எம்டிபியிலிருந்து திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அவற்றை வாங்கியக் குற்றத்திற்காக, அமெரிக்க அரசாங்கத்தால் ஜோ லோவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.