Home One Line P1 முன்னணிப் பணியாளர்களின் மாதாந்திர உதவித் தொகைகள் வழங்கப்படுவது எளிமைப்படுத்த வேண்டும்

முன்னணிப் பணியாளர்களின் மாதாந்திர உதவித் தொகைகள் வழங்கப்படுவது எளிமைப்படுத்த வேண்டும்

510
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காலப்பகுதியில் பணியாற்றும் முன்னணிப் பணியாளர்களின் சிறப்பு மாதாந்திர ஊக்கத்தொகை கோரிக்கைகள் வழங்கப்படுவது எளிமைப்படுத்தப்பட்டு விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் விரும்பம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்துடனான (எம்கேஎன்) சிறப்புக் கூட்டத்தில் தானே இந்த உத்தரவை வழங்கியதாக பிரதமர் கூறினார்.

“கூட்டத்தில் (நேற்று) நாங்கள் ஒரு கலந்துரையாடலை நடத்தினோம். சம்பந்தப்பட்டவர்களில் சிலருக்கு சிக்கல் இருந்தது. முன்னணி பணியாளர்களுக்கு பணம் செலுத்துவது சற்று மெதுவாக நடப்பதாகவும் அல்லது நிறைய விசயங்களை பாரத்தில் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“சம்பந்தப்பட்ட முன்னணி வீரர்கள் நிறைய நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்துள்ளதால் இதை எளிதாக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் வழங்க வேண்டிய சேவைகளும், நியாயமானதாக இருக்க வேண்டும், விரைவில் நிர்வகிக்கப்பட வேண்டும், ” என்று பிரதமர் கூறினார்.

கொவிட்19 கையாளுவதில் ஈடுபட்டுள்ள நாட்டின் முன்னணிப் பணியாளர்களுடன் 30 நிமிட காணொளி அமர்வில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.