இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 7,137-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
78 புதிய பாதிப்புகளில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர். மேலும், இவர்களில் 40 பேர் வெளிநாட்டினர் ஆவர். எஞ்சிய 13 பேர் உள்நாட்டிலேயே தொற்று கண்டவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் கொவிட் பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். கொவிட்19 தொற்று தொடங்கியது முதல் இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,859-ஆக உயர்ந்திருக்கிறது
தற்போது நாடு முழுமையிலும் 1,163 பேர் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 5 பேர் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் நாட்டில் கொவிட்19 காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது.